திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வேலை நாட்களில் பல்வேறு கோரிக்கைகளுக்காக ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். பொதுமக்கள் பயன்பாட்டுக்கென கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலின் அருகில் ஆண்கள், பெண்களுக்கென தனித்தனியாக பொது சுகாதார வளாகம் அமைக்கப்பட்டுள்ளன. அந்தச் சுகாதார வளாகத்தில் போதிய தண்ணீர் வசதி இல்லாததால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராணி, போளூர்.