திருப்பத்தூர் அருகே சவுடேபள்ளியில் பல இடங்களில் குடிநீர் தொட்டிகள் உள்ளன. இவற்றில் ஒரு சில முழுவதும் சேதமாகியும், மற்றவை சரியான பராமரிப்பு இன்றியும் உள்ளன. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே குடிநீர் தொட்டிகளை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பெரியசாமி, சவுடேபள்ளி.