வாணியம்பாடி பஸ் நிலைய பின்பக்கம் ரெயில் நிலையம் உள்ளது. அங்கு செல்ல ரெயில்வே நடைமேம்பாலம் உள்ளது. அந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். நடை மேம்பாலம் அருகே சாலையில் குளம்போல் மழைநீர் தேங்குகிறது. அந்த வழியாக செல்லும் மக்கள் அவதிப்படுகின்றனர். அருகில் நகராட்சி ஆணையர் அலுவலகம்,கோட்டாட்சியர் அலுவலகம் இருந்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-கண்ணதாசன், வாணியம்பாடி.