திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் கிராமம் விநாயகர் நகர் தெருவில் மழை பெய்யும் நேரத்தில் குளம்போல் தண்ணீர் தேங்குகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகள் தேங்கிய நீரில் நடந்து செல்கிறார்கள். தெருவில் மழைநீர் தேங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சரவணன், அப்துல்லாபுரம்.