திமிரி பேரூராட்சிக்கு உட்பட்ட 15-வது வார்டு அருந்ததியர் தெருவில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். மழைக்காலங்களில் தெருவில் மழைநீர் தேங்கி குளம்போலும், குட்டை குட்டையாகவும் காட்சியளிக்கிறது. பேரூராட்சி நிர்வாகம் எங்கள் பகுதிக்கு சிமெண்டு சாலை அமைத்துக்கொடுக்க வேண்டும். இல்லையேல், தற்காலிகமாக கிராவல் மண் கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-த.பரமசிவம், திமிரி.