பழுதான சிறு மின்விசை தொட்டி

Update: 2022-08-22 08:55 GMT

வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட அடுக்கம்பாறை ஊராட்சி மேட்டுஇடையம்பட்டி கிராமத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக சிறு மின்விசை தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது குடிநீர் தேவை அதிகமாக உள்ள நிலையில், பல ஆண்டுகளாகப் பழுதடைந்து பராமரிப்பின்றி கிடக்கும் இந்தச் சிறுமின்விசை தொட்டியை பழுது நீக்கி சரி செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவா மேட்டுஇடையம்பட்டி

மேலும் செய்திகள்