ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ஆப்பிராய் கிராமத்தில் கடந்த சில நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கு போதிய தண்ணீர் இன்றி அவதியடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியினருக்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.