உடுமலை அருகே குறிஞ்சேரி ஊராட்சி உள்ளது. இந்த பகுதி மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய ஆங்காங்கே பிளாஸ்டிக் தொட்டிகள் வைக்கப்பட்டன. இதையொட்டி தொட்டிகளில் ஒரு சில மாதங்கள் தண்ணீர் நிரப்பி வினியோகம் செய்யப்பட்டது. அதன்பின்னர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பவும் இல்லை. தொட்டியை பராமரிக்கவும் இல்லை. இதனால் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதிக்கப்படுகிறார்கள. எனவே குறிஞ்சேரி ஊராட்சியில் தண்ணீர் தொட்டிகளை பராமரிப்பு செய்து அவற்றில் மீண்டும் தண்ணீர் நிரப்பி பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமகிருஷ்ணன், உடுமலை.