பண்ருட்டி பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குளங்கள், நீர்வழி வாய்க்கால்கள் உள்ளன. இவை அனைத்தும் செடி கொடிகள் வளர்ந்து தூர்ந்துபோய் உள்ளன. இதனால் மழைக்காலங்களில் அதில் அதிக அளவில் குளங்களில் தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறையும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.