பொதுமக்கள் அவதி

Update: 2026-05-31 13:46 GMT

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் ஸ்ரீபுரந்தான் காலனி தெருவில் தேர்முட்டி அருகே ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் அன்றாட தேவைகளுக்கு போதிய தண்ணீர் இன்றி கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே மின்சாரம் இல்லாத போதும் பொதுமக்கள் பயன்படுத்துவது போல் தேர்முட்டி பகுதியில் அடிபம்பு ஒன்று அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்