குடிநீர் தட்டுப்பாடு

Update: 2026-05-24 16:09 GMT

தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை ஊராட்சியில் உள்ள ஆலமரத்தூர் கிராமத்தில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் அண்மைக்காலமாக குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. காலை நேரங்களில் குடிநீர் வினியோகம் முறையாக இல்லாததால் பெண்கள் காலி குடங்களுடன் மேல்நிலை குடிநீர் தொட்டி பகுதியில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் பல்வேறு வேலைகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே இந்த பகுதியில் சீரான குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்