சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம்

Update: 2026-05-24 15:49 GMT

மதுரை காமராஜபுரம் இந்திரா நகர் பகுதியில் கடந்த சில வாரங்களாகவே குடிநீர் சுகாதாரமற்ற முறையில் கலங்கலாக வினியோகிக்கப்படுகிறது. இதனை பயன்படுத்தும் பொதுமக்கள் மிகவும் அவதியடைகின்றனர். மேலும் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மக்கள் நலன் கருதி சுத்தமான குடிநீரை வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்