தர்மபுரி ரெயில் நிலையத்துக்கு செல்லும் சாலையில் தரைக்கு கீழே அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் லேசான உடைப்பு ஏற்பட்டு அதில் இருந்து குடிநீர் கசிகிறது. இதனால் தினமும் காலையில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் நேரத்தில் குழாயில் இருந்து கசியும் நீர் அந்த பகுதியில் உள்ள தார் சாலையில் வழிந்து ஓடுகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள சாலையில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. குழாயில் இருந்து குடிநீர் கசிந்து வீணாவதை தடுக்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.