திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் வாழ்மானபாளையம் கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கிராம மக்களுக்கு காவிரி குடிநீர் வினியோகிக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் போதிய குடிநீர் இன்றி கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே இப்பகுதி பொதுமக்களுக்கு காவிரி குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.