பந்தலூர் அருகே பந்தப்பிளா பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த சில நாட்களாக குடிநீர் சீராக வினியோகிக்கப்படுவது இல்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் குடிநீருக்காக நீண்ட தொலைவுக்கு அலைந்துதிரியும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு உள்ளனர். எனவே அந்த பகுதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.