அரியலூர் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில், பெரியார் நகர் முதல் தெருவில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், இங்குள்ள வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் வகையில் புதிய கொள்ளிடம் இணைப்பு குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் குடிநீர் வீணாகி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்ய வேண்டும்.