ராமநாதபுரம் மாவட்டம் சூரன்கோட்டை கிராமம் அருகில் ஸ்ரீராம்நகர் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு போதிய குடிநீர் வசதி இல்லை. இதனால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கடும் அவதியடைகின்றனர். மேலும் குடிநீரை காசு கொடுத்து வாங்கி குடிக்கும் நிலை உள்ளது. எனவே மேற்கண்ட பகுதி மக்களுக்கு தேவையான குடிநீர் வசதி ஏற்படுத்திதர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?