மேச்சேரி பேரூராட்சி சந்தைப்பேட்டை அருகில் ஏரி உள்ளது. இந்த ஏரி கடந்த 6 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் ஏரி முழுவதையும் ஆகாயத்தாமரைகள், கோரை புற்கள் ஆக்கிரமித்துள்ளன. இதன் காரணமாக ஏரியை அப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்த முடியவில்லை. மேலும் பாம்பு, தேள், பூரான் உள்பட விஷ பூச்சிகளின் நடமாட்டம் இப்பகுதியில் அதிகளவில் உள்ளது. இந்த ஏரி அருகே உள்ள சந்தைப்பேட்டை, மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில், பள்ளி கூடம் போன்ற இடங்களிலும் விஷ பூச்சிகளின் நடமாட்டம் உள்ளது. எனவே ஏரியை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளையும், கோரை புற்களையும் அதிகாரிகள் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.