குடிநீர் வீணாகிறது

Update: 2026-05-17 12:44 GMT

ராயக்கோட்டை முதல்நிலை ஊராட்சி எச்சம்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் உடைந்து நீண்ட நாட்களாக தண்ணீர் வீணாகி சாக்கடை போல உள்ளது. இதில் கொசு உற்பத்தியாகி சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. மேலும் அந்த வழியாக வாகனங்கள் சிரமப்பட்டு செல்கின்றன. குடிநீரில் சாக்கடை நீர் கலக்க வாய்ப்பு உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்