குழாய் உடைந்து வெளியேறும் குடிநீர்

Update: 2026-05-17 12:08 GMT

சென்னை, கொரட்டூர் சென்ட்ரல் அவென்யூ 39-வது தமிழ்நாடு குடிநீர் வாரியக் குடியிருப்பு எதிரில் உள்ள சாலையில் சில நாட்களாக சாலையில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் குழாய் உடைந்து அதில் இருந்து குடிநீர் வெளியேறிவருகிறது. இதனால் குடிநீர் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் கொசு உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு உருவாகும் அபாய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் செய்திகள்