தேனியை அடுத்த மேகமலை அருவியில் பெண்கள், குழந்தைகள் குளிப்பதற்காக தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை அது பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் பெண்கள், குழந்தைகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே தண்ணீர் தொட்டியை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.