நடவடிக்கை எடுக்க வேண்டும்

Update: 2026-04-26 06:43 GMT

தென்தாமரைக்குளம் ஊரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி தெருவில் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்றது. அதன் வேலை முடிந்த பின் சாலை சீரமைக்கப்பட்டது. அப்போது சாலை உயரமாக போடப்பட்டதால் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் தெரு குழாயில் குடத்தை வைத்து தண்ணீர் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி அதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜேசு செல்வ பிரோஸ்மின், கன்னியாகுமரி.

மேலும் செய்திகள்