பயன்பாடற்ற குடிநீர் தொட்டி

Update: 2026-03-08 13:30 GMT

சேலம் சுகவனேசுவரர் கோவில் பின்புறம் அருகே மின்மோட்டார் இணைப்புடன் கூடிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்களும், பொதுமக்களும் இந்த தொட்டியில் உள்ள தண்ணீரை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக மின்மோட்டார் பழுதால் தொட்டியில் தண்ணீர் இல்லாமல் உள்ளது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள், பக்தர்கள் தண்ணீர் கிடைக்காமல் மிகவும் அவதிப்படுகிறார்கள். தற்போது கோடை காலம் தொடங்க உள்ளதால் பொதுமக்கள், பக்தர்கள் நலன் கருதி விரைந்து இந்த தொட்டியில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்