பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள துறைமங்கலம் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு செல்லும் வரத்து வாய்க்காலில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. மேலும் வாய்க்காலில் கழிவுநீர் குளம் போல் தேங்கியுள்ளதால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே வாய்க்காலை தூர்வாரி சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.