ஏரிக்கு வரும் வரத்து வாய்க்காலை தூர்வார வேண்டும்

Update: 2026-02-15 11:14 GMT

அரியலூர் நகரில் உள்ள வ.உ.சி. தெருவில் அய்யப்பனேரி உள்ளது. இந்த ஏரிக்கு வரும் வரத்து வாய்க்கால்கள் முழுவதும் குப்பைகள் நிறைந்தும், கருவேல மரங்கள் முளைத்தும் காட்சியளிக்கிறது. இதன் காரணமாக தண்ணீர் வருவது தடைபட்டு போவதுடன் வருகின்ற சிறிதளவு தண்ணீரும் அசுத்தமாக வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இதனால் ஒவ்வொரு நீர்நிலைகளாக அழிந்து வரும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு வரத்து வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்