சூளகிரி ஒன்றியம் அத்திமுகம் கிராமத்தில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சூளகிரி-பேரிகை சாலையில் உள்ள குழாய் உடைந்து கடந்த 2 மாதகாலமாக தண்ணீர் வீணாக வெளியேறி கொண்டிருக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினரிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து குழாயை சரிசெய்தால் தண்ணீர் வீணாவதை தவிர்க்கலாமே!