சுத்தமான குடிநீர் வேண்டும்

Update: 2026-01-25 13:28 GMT

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் கடம்பூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு பஞ்சாயத்து சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குடிநீரானது கடந்த சில மாதங்களாக துவர்ப்புடனும், உப்பாகவும் வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் இந்த குடிநீரை குடிப்பதற்கு முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்