மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் செட்டிக்குளம் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் தூண்கள் சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் தொட்டியை கடந்து பயணிக்கும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சம் அடைகின்றனர். நீர்த்தேக்க தொட்டியின் அருகே அங்கன்வாடி மையம் உள்ளதால் அங்கு படிக்கும் குழந்தைகளின் பெற்றோரும் அச்சத்தில் உள்ளனர். அசம்பாவிதம் ஏற்படும் முன்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.