கடையம் அருகே பொட்டல்புதூர்- முக்கூடல் செல்லும் சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் பெரிய பள்ளம் ஏற்பட்டு்ள்ளது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே குழாய் உடைப்பை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாாிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்கிறேன்.