சேலம் மாவட்டம் எஸ்.பாப்பாரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர். நகர் செல்லும் சாலையில் போக்குவரத்து இடையூராக சாலையோரம் செயல்படாத குடிநீர் குழாய் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே செல்கின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் அடிக்கடி விபத்தில் சிலர் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே செயல்படாத குடிநீர் குழாயை உடனடியாக அகற்ற வேண்டும்.