சுகாதாரமற்ற குடிநீர் தொட்டி

Update: 2026-01-11 13:42 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள அத்திமுட்லு கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. இந்த குடிநீர் தொட்டியை சுற்றிலும் கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் குடிநீர் பிடிக்க சிரமப்படுகின்றனர். மேலும் தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிகாரிகள் இந்த பகுதியை ஆய்வு செய்து சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்