புதர்மண்டி கிடக்கும் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி

Update: 2026-01-11 11:30 GMT

மன்னார்குடி பகுதி அண்டேராத்தெருவில் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி உள்ளது. இந்த தொட்டியை சுற்றிலும் செடி,கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. தொட்டியில் இருந்து நீர் கசிந்து பாசிபிடித்து காணப்படுகிறது. தொட்டியில் ஒரு சில பகுதியில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பராமரிப்பின்றி புதர்மண்டி கிடக்கும் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டியை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்