கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா சிவாயம் வடக்கு கீழாரிப்பட்டி பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இந்த தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால், அதில் உள்ள குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் போதிய குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே உடைந்துள்ள குழாய்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.