திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம் கிழக்குறிச்சி பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் தேவைக்காக 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டது. இந்த தொட்டிகள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது முற்றிலும் சிதிலமடைந்து இடிந்துவிழும் நிலையில் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின் போது இந்த நீர்த்தேக்க தொட்டிகள் இடிந்துவிழுந்தால், பெரிய அளவிலான உயிர் சேதங்கள் ஏற்பட அதிகச வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.