வீணாகும் குடிநீர்

Update: 2026-01-11 08:07 GMT

குளச்சல் அருகே சைமன் காலனி ஊராட்சி அலுவலகம் அருகில் சாலையோர்தில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக பாய்கிறது. இதனால் அந்த பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யும் போது குறிப்பிட்ட பகுதிக்கு செல்வது தடைபடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அமீன்,குளச்சல்.

மேலும் செய்திகள்