கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. அந்த குழாய் வழியாக நீண்ட நாட்களாக குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது. புதர்கள் சூழ்ந்த பகுதியில் இருந்து குடிநீர் வெளியேறுவதால் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களும் கண்டு கொள்வதில்லை. இனிவரும் நாட்கள் கோடைகாலம் என்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பழுதடைந்த குழாயை உடனடியாக சீரமைக்க முன்வர வேண்டும்.