கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே உள்ள தெருவில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதம் அடைந்துள்ளது. இது மிகவும் பலவீனமடைந்து எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலை உள்ளது. எனவே இப்ப விழுமோ? எப்ப விழுமோ? என்ற நிலையில் இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியை இடித்து அகற்றி விட்டு புதிதாக கட்டித்தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.