பர்கூர் டவுன் பஸ் நிலையத்திற்கு தினமும் 25-க்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள் வந்து செல்கின்றன. மேலும் பர்கூருக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்களும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களும் வந்து செல்கின்றனர். பஸ் நிலையத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பர்கூர் பேரூராட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த குடிநீர் தொட்டியில் கடந்த சில மாதங்களாக தண்ணீர் ஏற்றப்படாமல் உள்ளது. இதனால் அனைவரும் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே தாமதம் இன்றி தொட்டியில் குடிநீர் நிரப்பி பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.