வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அலுவலக வளாகம் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. தினசரி ஏராளமான பொதுமக்கள் வந்து செல்லும் பகுதி என்பதால் அதிகாரிகள் விரைந்து குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை எங்கள் கோரிக்கையாக உள்ளது.