சாலையில் தேங்கும் தண்ணீர்

Update: 2025-11-23 16:53 GMT

உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் யு.கே.சி. நகர் குடியிருப்பு உள்ளது. இந்தப் பகுதியில் அமைக்கப்பட்ட சாலைகள் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வந்த நிலையில் புதுப்பிக்கப்பட்டது. அப்போது மழை நீர் வடிந்து செல்ல வடிகால் அமைக்கவில்லை. இதன் காரணமாக சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி வருகிறது. இதனால் அந்த வழியாக செல்கின்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். யு.கே.சி. நகர் 2-வது வீதி பகுதியில் கழிவுநீர் கால்வாய் கட்டபடவில்லை. இதனால் தண்ணீர் நிரந்தரமாக சாலையில் தேங்கும் சூழல் நிலவுகிறது. எனவே மழைநீர் வடிந்து செல்லும் வகையில் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்