ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தளிர்மருங்கூர் ஊராட்சி பாகனவயல் கிராமத்தில் சில மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் அப்பகுதியினர் போதிய குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து போதிய குடிநீர் வசதி ஏற்படுத்திதர நடவடிக்கை எடுப்பார்களா?