சிதம்பரம் அண்ணாமலைநகர் பகுதியில் உள்ள பெரும்பாலான தெருக்களில் குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் குழாய் பதித்து பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க குடிநீர் குழாய் அமைத்து பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.