பெரம்பலூர் மாவட்டம், நாட்டார்மங்கலம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குழாய் மூலம் ஊராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குடிநீர் கலங்கலாக வருவதினால், இப்பகுதி மக்கள் அவற்றை குடிப்பதற்கும் சமைப்பதற்கும் பயன்படுத்த முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.