சேதடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டி

Update: 2025-11-09 09:45 GMT


சேவூர் வடக்கு வீதி பள்ளிவாசல் அருகில் மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. இது போதிய பராமரிப்பு இ்ல்லாமல், வெடிப்புகள் ஏற்பட்டும் உள்ளது. தற்போது மழை பெய்து வருவதால் ஆற்று நீர் சேரும் சகதியுமாக கலந்து வருகிறது. தொட்டி பராமரிப்பு இல்லாமல் குடிநீர் வருகிறது. இதனால் அந்த குடிநீரை குடிப்பதால் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு மேல்நிலை குடிநீர் தொட்டியை சீரமைத்து பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பார்களா?

சந்திரன், சேவூர்.

மேலும் செய்திகள்