காஞ்சீபுரம் மாவட்டம், தண்டலம் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியின் கழிவுகள், தொழிற்சலையின் கழிவுகள், சாக்கடை கழிவுநீர் அனைத்தும் மழைநீருடன் கலந்து செம்பரம்பாக்கம் ஏரியில் கலக்கும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஏரிக்கரையில் புதர் மண்டியும் காணப்படுகிறது. நன்னீர் ஏரியின் நிலை புதுப்பிக்கப்பட சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.