கடலூர் ஒன்றியம் மதலப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட பூசாரிப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் உள்ள குடிநீர் குழாய் சுமார் 6 மாதங்களுக்கு முன்பு சேதமடைந்தது. இதனால் அதில் குடிநீர் தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. இதனால் அடிக்கடி குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதால் கிராம மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த குடிநீர் குழாயினை விரைந்து சரிசெய்ய வேண்டியது அவசியம்.