பண்ருட்டி அருகே நடுவீரப்பட்டு சிவன் கோவில் எதிரே உள்ள குளம் நீண்ட நாட்களாக பராமரிப்பில்லாமல் தூர்ந்துபோய் காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீரை அதிக அளவில் குளத்தில் சேமித்து வைக்க முடியாத சூழல் உள்ளது. மேலும் இங்கு அதிகளவில் குப்பைகள் மற்றும் இறைச்சிக்கழிவுகளும் கொட்டப்படுகின்றன. இதன் காரணமாக அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் நிலையும் உருவாகியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து குளத்தை தூர் வார வேண்டும்.