தண்ணீர் தட்டுப்பாடு

Update: 2025-10-12 12:52 GMT

சேலம் பச்சப்பட்டி 40-வது வார்டு பகுதியில் மாநகராட்சி ஆதிதிராவிடர் மயானம் உள்ளது. இதன் அருகில் உள்ள பொதுமக்கள் தினந்தோறும் பயன்படுத்தும் குடிநீர் தொட்டி குழாய் உடைந்து 2 ஆண்டுகள் ஆகிறது. இதனால் அப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குழாயை சீரமைத்து குடிநீர் வழங்க வேண்டும்.

-பிரகாஷ், பச்சப்பட்டி.

மேலும் செய்திகள்