அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் பிரம்மதேசம் கிராமம் கஸ்பாபிரம்மதேசத்துக்கு மேல்நிலை குடிநீர் தொட்டி மூலம் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் கடந்த பல நாட்களாக சரிவர தண்ணீர் வழங்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகின்றனர். எனவே குடிநீர் வழங்க அதிகாரிகள் முன்வருவார்களா?