கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே கொத்தபாளையத்தில் அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது. ஆற்றில் தண்ணீர் வரும் காலங்களில் இந்த தடுப்பணையில் தண்ணீர் வழிந்தோடும். அரவக்குறிச்சி, கொத்தப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் தடுப்பணைக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் இந்த அணையின் ஓரங்களில் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து முட்புதராக காட்சியளிக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.